உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி காங்., தலைவர் மாற்றம்?

மாநகராட்சி காங்., தலைவர் மாற்றம்?

சென்னை சத்தியமூர்த்திபவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சென்னை மாநகராட்சியின் 12 காங்., கவுன்சிலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் நடந்தது.தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:காங்கிரஸ் எம்.பி.,மாணிக்தாகூர் ஆதரவாளர் திரவியத்தை, சென்னை மாநகராட்சி காங்., தலைவராக அப்போதைய மாநில தலைவராக இருந்த அழகிரி நியமித்தார்.தற்போது செல்வப்பெருந்தகை மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் காங்., பதவியிடங்களை, தேர்தல் வாயிலாக நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தற்போது நியமன பதவியில் உள்ள சென்னை மாநகராட்சி தலைவர் திரவியத்தை மாற்றி, தேர்தல் வாயிலாக புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என, 12 கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.மாநகராட்சி காங்., புதிய நிர்வாகிகளை, தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.மாநகராட்சி தலைவர் பதவிக்கு கவுன்சிலர்கள் சிவராஜசேகரன், டில்லிபாபு ஆகியோர் மத்தியில் போட்டி நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி