உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.3.25 கோடி வாடகை பாக்கி 170 கடைகளுக்கு மாநகராட்சி சீல்

ரூ.3.25 கோடி வாடகை பாக்கி 170 கடைகளுக்கு மாநகராட்சி சீல்

சென்னை, மாநகராட்சிக்கு, 3.25 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்திருந்த, 170 கடைகளுக்கு அதிகாரிகள் நேற்று அதிரடியாக சீல் வைத்தனர்.கோடம்பாக்கம் மண்டலத்தில், பனகல் பூங்கா அருகேயும், தியாகராயா சாலையிலும் மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான கடைகள் இயங்கி வருகின்றன. இதில், சில கடைக்காரர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து வாடகை செலுத்தாத கடைக்காரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில், 170 கடைக்காரர்கள், 3.25 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டன. அதன் பிறகும், வாடகை செலுத்த யாரும் முன்வரவில்லை.நேற்று, பனகல் பூங்கா அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில், 20 கடைகளுக்கும், தியாகராயா சாலையில் உள்ள வணிக வளாகத்தில், 150 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை