உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளியில் சேர்க்க டி.சி., கேட்கக் கூடாது சுற்றறிக்கை பிறப்பிக்க ஐகோர்ட் உத்தரவு

பள்ளியில் சேர்க்க டி.சி., கேட்கக் கூடாது சுற்றறிக்கை பிறப்பிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா காலக்கட்டத்தில், கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் பலர், தனியார் பள்ளிகளை விட்டு விலகி, அரசு பள்ளிகளில் சேர முற்பட்டனர். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கேட்டபோது, கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களை கூறி, தனியார் பள்ளிகள் மறுத்தன. இதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், மாணவர்களை சேர்க்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது.இதை எதிர்த்து, அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'மாற்று சான்றிதழ் கேட்டு, தற்போது படிக்கும் பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும். பின், ஒரு வாரத்தில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்; எந்த காரணத்துக்காகவும், மாற்று சான்றிதழ் மறுக்கக் கூடாது' என உத்தரவிட்டிருந்தார்.இதனை எதிர்த்து, பள்ளி கல்வித்துறை மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டண பாக்கியை வசூலிக்க மாற்றுச் சான்றிதழ் ஒரு கருவி அல்ல. அது, மாணவனின் தனிப்பட்ட ஆவணம். அதில் தேவையின்றி குறிப்புகளை எழுதி, மாணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடாது. கட்டண பாக்கியை சம்பந்தப்பட்ட பள்ளிகள் சட்டப்படி வசூலித்துக் கொள்ள வேண்டும். கல்வி பெறும் உரிமை சட்டத்தில், மாற்று சான்றிதழ் கட்டாயமாக்கப்படவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.தமிழ்நாடு கல்வி விதிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒழுங்குமுறை விதிகளை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உரிய திருத்தங்களை மூன்று மாதங்களில் மேற்கொள்ள வேண்டும்.மாணவர்கள் சேர்க்கையின்போது, மாற்று சான்றிதழ் அளிக்கும்படி வற்புறுத்தக் கூடாது; மாற்று சான்றிதழில் தேவையின்றி குறிப்புகள் எழுதக் கூடாது என அனைத்து பள்ளி நிர்வாகத்துக்கும், அரசு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ibrahim Ali A
ஜூலை 20, 2024 13:11

இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது கல்வி என்பது அனைவருக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு நன்றி


PRABAKAR REDDY GT I Proud BHARAT JAISRIRAM
ஜூலை 20, 2024 13:02

நல்ல தீர்ப்பு வரவேற்கத்தக்க நன்றி


மேலும் செய்திகள்





புதிய வீடியோ