உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேட்டரி வாகனங்கள் பழுது துாய்மை பணி பாதிப்பு

பேட்டரி வாகனங்கள் பழுது துாய்மை பணி பாதிப்பு

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 2,125 தெருக்கள் உள்ளன. இதில் 90,000த்திற்கும் மேற்பட்ட வீடுகளில், 3.55 லட்சம் பேர் வசிக்கின்றனர். மண்டலத்தில், உர்பேசர் நிறுவனம் சார்பில் துாய்மை பணி நடக்கிறது.பேட்டரி வாகனங்களை கொண்டு, வீடுவீடாக குப்பை சேகரிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பேட்டரி வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், துாய்மை பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வாகனம் பழுது நீக்கும் வரை, அந்த வாகனம் எந்தெந்த தெருக்களில் சென்றதோ அங்கெல்லாம் துாய்மை பணி நடப்பதில்லை. பல தெருக்களில் சாலைகள் மோசமாக உள்ளது. அதில் செல்லும் பேட்டரி வாகனங்கள் எளிதில் பழுதடைகின்றன.தொய்வில்லாமல் துாய்மை பணி நடக்க, பழுதடைந்த பேட்டரி வாகனங்களை சீரமைக்க வேண்டும் என, ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை