உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வைர மோதிரம் ஆட்டை♠

வைர மோதிரம் ஆட்டை♠

கொடுங்கையூர், கொடுங்கையூர், ஆறாவது பிளாக்கை சேர்ந்தவர் தீபக், 31; ஐ.டி., நிறுவன ஊழியர். கடந்த 1ம் தேதி இரவு, வீட்டில் உள்தாழிட்டு துாங்கினார். 2ம் தேதி காலை பார்த்த போது, மேஜை மீது வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம், ஒரு சவரன் தங்க மோதிரம், 5,000 ரூபாய், மொபைல்போன் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். திருட்டில் தொடர்புடைய கொடுங்கையூர், 2வது பிளாக்கை சேர்ந்த இப்ராஹிம், 23, செங்கல்பட்டைச் சேர்ந்த மணிமாறன், 25, ஆகிய இருவரை, நேற்று காலை கைது செய்தனர். விசாரணைக்குப் பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி