உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி கழிவுநீர் கொட்டுவதை தடுக்க சாலையில் பள்ளம் தோண்டி நடவடிக்கை

லாரி கழிவுநீர் கொட்டுவதை தடுக்க சாலையில் பள்ளம் தோண்டி நடவடிக்கை

செம்மஞ்சேரி,சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜெவகர் நகர், எழில்முக நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஓ.எம்.ஆரில் இருந்து ஜெவகர் நகர் செல்லும் சாலையின் வடக்கு திசை, சென்னை மாவட்டம், மாநகராட்சி எல்லையில் உள்ளது. தெற்கு திசை, செங்கல்பட்டு மாவட்டம், நாவலுார் ஊராட்சி எல்லையில் உள்ளது.தெற்கு திசையில் உள்ள தனியார் காலிமனைகள் மற்றும் அரசு இடங்களில், நள்ளிரவில் கழிவுநீர் கொட்டுப்பட்டது. இதனால், தொற்று பாதிப்பு ஏற்பட்டது.அருகில் ஆழ்துளை கிணறுகள் உள்ளதால், நிலத்தடி நீர் மாசடைந்து, குடிநீர் சுகாதார சீர்கேடாக மாறியது.பகுதிமக்கள், அத்துமீறும் லாரிகளை பிடித்து, செம்மஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கழிவுநீர் விடுவதை தட்டிக்கேட்டால், பகுதிமக்களுக்கு மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, கழிவுநீர் கொட்டுவதற்காக லாரி செல்லும் பாதையில், குடிநீர் வாரியத்தினர் ஜே.சி.பி., இயந்திரத்தால் பள்ளம் தோண்டி, தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு

சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, துரைப்பாக்கம், பல்லவன் தெருவில் காலி இடத்தில் கழிவுநீர் விடப்பட்டது.புதராக வளர்ந்துள்ளதால், கழிவுநீர் நிரம்பி இருப்பது வெளியே தெரியவில்லை. இதனால், துர்நாற்றம் வீசி, அங்கிருப்போர் துாக்க முடியாமல், சுவாச பிரச்னை ஏற்பட்டு அவதிப்பட்டனர்.இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், வீடுகளில் இருந்து காலி இடத்தில் கழிவுநீர் விட்ட குழாய்களை அடைத்தனர்.மேலும், தேங்கி நின்ற கழிவுநீரால் சுகாதார பிரச்னை ஏற்படாத வகையில், தேவையான நடவடிக்கை எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை