உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பு

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வகுப்பு

சென்னை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில் 'தொழில் முனைவோர் - டிஜிட்டல் மார்க்கெட்டிங்' தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பு, மூன்று நாட்கள் நடக்க உள்ளது.வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை, சென்னை, ஈக்காட்டுத்தாங்கல், சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அமைந்துள்ள கட்டடத்தில், பயிற்சி வகுப்பு நடக்கும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் தரவு கையாளுதல், சைபர் கொள்கை, மார்க்கெட்டிங் உத்திகள், சந்தைப்படுத்துதல், சமூக ஊடக தரவு போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.இது குறித்த விபரங்களை, www.editn.inஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2225 2081, 86681 00181, 98413 36033 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை