உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை:காளிகாம்பாள் கோவில் அறங்காவலர்கள் தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பாரிமுனையில் காளிகாம்பாள் கோவில் உள்ளது.இக்கோவிலில் அறங்காவலர் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றும், அதை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியும், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த காளிகாம்பாள் கோவில் தேவஸ்தான உறுப்பினர் ஜெய்ராஜ்கோபால் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு, நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. கோவில் அறங்காவலர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் டாக்டர் சூர்யா ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:தேர்தல் நடந்து முடிந்து, அறங்காவலர்கள் பதவி ஏற்றுள்ளனர். எனவே, தேர்தலை ரத்து செய்ய முடியாது.அறநிலையத்துறை சட்டப்படி, அறங்காவலர்கள் நியமனத்தில் தகுதியில்லாத நபர் நியமிக்கப்பட்டு உள்ளதாக புகார் அல்லது குற்றச்சாட்டுகள் எழுந்தால், அவர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் முறையிட வேண்டும். அறங்காவலர் பதவிக்கு நடத்தப்படும் தேர்தலை ரத்து செய்ய உரிமையில்லை. வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை