உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடிகால் பணிகள் மந்தகதி பெரியார் நகர்வாசிகள் அவதி

வடிகால் பணிகள் மந்தகதி பெரியார் நகர்வாசிகள் அவதி

கொளத்துார், கொளத்துார், பெரியார் நகரில் 1வது தெரு முதல் 20வது தெரு வரையில், புது கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை, குடிநீர் வாரியம் மேற்கொண்டுள்ளது.பெரியார் நகர் பிரதான சாலையில், ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், ஒரு கல்லுாரி உள்ளதால் எந்நேரமும் வாகன நெரிசல் உள்ளது. இந்தநிலையில் பெரியார் நகர் 12 மற்றும் 13வது தெருக்களில், கழிவுநீர் கால்வாய் அமைக்க பொக்லைன் வாயிலாக பள்ளம் தோண்டும் போது, மின்சார கேபிள்கள், குடிநீர் குழாய்களை உடைத்து செல்கின்றனர்.இதனால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பல வீடுகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.அரசு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், பணிகள் மந்தகதியில் நடக்கின்றன. பெரியார் நகர் பகுதிவாசிகள் கூறியதாவது:கால்வாய் பணிகளால் மின்சார கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதை சரிசெய்ய புகார் அளித்தால், மின் வாரிய ஊழியர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை. இதனிடையே பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் கொளத்துார் - செங்குன்றம் சாலை பகுதிகளில், மழைநீர் வடிகால் பணிகள் சில நாட்களுக்கு முன் துவக்கப்பட்டுள்ளது. ஆனால் மந்தகதியில் நடக்கிறது. அதேபோல மெட்ரோ ரயில் பணியும் நடக்கிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பணிகள் விரைந்து முடிக்கப்படாவிடில், பருவ மழைக்காலத்தில், முதல்வர் தொகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை