உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இந்தியா பின்பற்ற வேண்டியது இனி திராவிட மாடல் தான்: கமல்

இந்தியா பின்பற்ற வேண்டியது இனி திராவிட மாடல் தான்: கமல்

மயிலாப்பூர், லோக்சபா தேர்தலையொட்டி, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதி தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நடிகரும் ம.நீ.ம., தலைவருமான கமல்ஹாசன், நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.மயிலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், கமல்ஹாசன் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் நான் எந்த தொகுதியில் நிற்பேன் என்று எதிர்பார்த்தார்களோ, அதே தொகுதியில் இன்று ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்.'குஜராத் மாடல் தான் சிறப்பு. திராவிட மாடல் எல்லாம் ஒன்றுமில்லை' என, இனி யாரும் கூற முடியாது. இந்த பொய்க்கு அற்புதமான மலர் வளையம் வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.நாயகன் படத்தில் 'அடித்தால் தான் அடியில் இருந்து தப்ப முடியும்' என்று வசனம் ஒன்று வரும். ஜனநாயக நாட்டில் ஆளை அடிக்க முடியாது. ஆனால் சித்தாந்தத்தை அடிக்கலாம்.முதல்வர் ஸ்டாலின், முக்கியமாக பா.ஜ., சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார். நீங்களும், தி.மு.க.,வை விமர்சித்தவர் தானே என கூறுகின்றனர்.விமர்சனம் செய்வது என் கடமை; மக்களின் கடமையும் கூட. ஆனால் ஆபத்து என்று வரும்போது என் கையில் தண்ணீர் பாட்டில் இருக்கிறது. இருந்தாலும் கொடுக்க மாட்டேன் என்று சொல்பவன் நல்லவன் அல்ல; நான் அப்படிப்பட்டவனும் கிடையாது.இலவச பேருந்து திட்டத்தை இந்தியா முழுதும் செயல்படுத்தினால், எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்து பாருங்கள். ஏழ்மை நிரந்தரமானது அல்ல. எனவே, இனி மேல் இந்தியா பின்பற்ற வேண்டியது திராவிட மாடலை தான். நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

panneer selvam
ஏப் 07, 2024 14:34

Kamal ji , first get Kaveri water from another Dravidians ruling from Bangalore so that we could advise others in India to follow Dravidian Model


A1Suresh
ஏப் 07, 2024 11:29

போதை மருந்து, சாராயம், ரௌடியிசம், ஊழல், லஞ்சம், ஓட்டிற்கு பணம், அராஜகம் இவைகளே திராவிட மாடல் ஆகும் வேண்டாமே வடநாடாவது நன்றாக வாழட்டுமே


Indian
ஏப் 07, 2024 09:25

கருமம் கருமம், உருப்படாத மாடல், கேவலமான model, விடியாத model,


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி