உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஈசல் விற்பனை புறநகரில் ஜரூர்

ஈசல் விற்பனை புறநகரில் ஜரூர்

மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடி, ஆவணி புரட்டாசி மாதங்களில் ஈசல் அதிகம் கிடைக்கிறது. புற்றிலிருக்கும் இவை, மழைக்காலங்களில் இரவு வேளைகளிலும், சூரிய உதய நேரங்களிலும் புற்றை விட்டு வெளியேறுகின்றன. புரதச்சத்து நிறைந்தது என்பதால், செங்கல்பட்டின் பல பகுதிகளில், மாலை நேர நொறுக்கு தீனியாக சாப்பிடுகின்றனர்.ஈசல் வியாபாரம் செய்யும் பச்சையப்பன் கூறுகையில், ''இரவு நேரத்தில் புற்றின் மீது குறிப்பிட்ட தாவரத்தை பொடியாக்கி துாவி விட்டு, அருகில் விளக்கு மற்றும் பாத்திரம் வைத்தால், அதில் ஈசல் வந்து விழும். ஒரு படி ஈசல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை