உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோர்ட் உத்தரவிட்டு 5 மாதங்களாகியும் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மெத்தனம்

கோர்ட் உத்தரவிட்டு 5 மாதங்களாகியும் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மெத்தனம்

அம்பத்துார், அம்பத்துார் மண்டலத்தில், கொரட்டூர் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை, தனியார் சிலர் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்து, ஆர்.கே.தட்சன் நகர், தனலட்சுமி நகர் ஆகியவற்றை உருவாக்கினர். ஏரி ஆக்கிரமிப்புகள் குறித்து, நீர்நிலை மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.இது குறித்து விசாரித்த மாவட்ட வருவாய்த் துறையினர், கடந்தாண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.அப்போது, அங்கு வசிக்கும் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'நாங்கள் ஏரிக்குள் வசிக்கவில்லை; நாங்கள் வசிக்கும் இடம் ஆக்கிரமிப்பு எனக்கூறி, அரசு அதிகாரிகள் எங்களை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர்' என குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, நீதிமன்றம் சென்னை கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன் பின் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தபோது, அவர்கள், வழக்கு மனுவில், சர்வே எண்ணை மாற்றி குறிப்பிட்டிருப்பதும், ஏரிக்குரிய சர்வே எண்ணில் வசிப்பதும் உறுதி செய்யப்பட்டது.இதனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஏரியில் உள்ள தட்சன் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜனவரி மாதம் உத்தரவிட்டது. சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், நீர்வள ஆதாரத்துறை மற்றும் அம்பத்துார் சிறப்பு வட்டாட்சியர் ஆகியோருக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டது.ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட அரசுத்துறை நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றாமல் உள்ளது. அதற்கு காரணம், அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்கு மாற்று இடம் கிடைக்கும் என்ற திட்டத்தில், புது ஆக்கிரமிப்புகளும் முளைக்கின்றன. அரசுத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kanagasundaram
ஜூன் 22, 2024 07:07

No action taken due to political interference.


Deva
ஜூன் 21, 2024 18:17

திருவேற்காடு நகராட்சியில் உள்ள கோலடி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏழை மக்களை ஏமாற்றி விற்பனை செய்து கொண்டே இருக்கிறார்கள் ஏரியை வீட்டு மனை ஆக்கி விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா?


Murali
ஜூன் 21, 2024 14:40

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் வருவாய் கிராமத்தில் சர்வேஎண்: 107-2-ல் உள்ள வாய்க்கால் புறம்போக்கு,சர்வே எண் 129-ல் உள்ள ஏரி புறம்போக்குகளில் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது...


Ravi,V
ஜூன் 20, 2024 20:59

இப்படி தான் எங்க ஊரிலும் ஏரில் ஆக்கிரமிப்பு செய்து 7 ஏக்கர் நிலத்தை அனுபவிக்கிறார்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து ஒரு வருஷம் ஆன நிலையில் எந்த வித நட வடிகையும் எடுக்க வில்லை மேலும் 73சென்ட் பரப்பளவில் இருந்த குளத்தை சமப்படுத்திவிட்டு விவசாயம் செய்கிறார்கள் மேலும் அதிகாரிகள் அக்கிரமிப்பாளருக்கு ஆதார வாக செயல் படுகிறார்கள்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ