உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முகூர்த்தம் இல்லாததால் பூக்கள் விலையில் சரிவு

முகூர்த்தம் இல்லாததால் பூக்கள் விலையில் சரிவு

கோயம்பேடு, கோயம்பேடு பூ சந்தையில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து, பூக்கள் வரத்து அதிகம் உள்ளது. நேற்று ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில், பூக்களின் விலை சரிவை கண்டுள்ளது. ஆடி மாதத்தை பொறுத்தவரை, அம்மன் கோவில்கள் விழாக்கோலத்தால் களைகட்டும். அதேநேரம், முகூர்த்த தினங்கள் என, ஏதும் இல்லாததால், பூக்களின் தேவை சரிவை கண்டுள்ளது. கடந்த மாதங்களில் வரத்து அதிகம் இருந்தபோதும், தேவையும் அதிகம் இருந்ததால் பூக்களின் விலை உச்சத்துக்கு சென்றது. ஆடி வெள்ளி வருவதால், பூக்களின் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.நேற்றைய விலை நிலவரப்படி, ஒரு கிலோ பன்னீர் ரோஸ், 40 -- 50; செண்டு மல்லி, 40 -- 50; மல்லி, 600; கனகாம்பரம், 400 -- 500; அரளி பூ 100 -- 150; சம்பங்கி, 60 -- 75; சாமந்தி 150 -- 200; முல்லை- 240 ரூபாய்க்கும் விற்பனையாயின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ