உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகன் தாக்கியதில் தந்தை பலி

மகன் தாக்கியதில் தந்தை பலி

கோடம்பாக்கம், கோடம்பாக்கம், வரதராஜா பேட்டையை சேர்ந்தவர், ஸ்டீபன் எட்வர்ட், 56. பெயின்டர். இவருக்கு ஷர்வின் அஜய் குமார், 24 மற்றும் ஷோகன் ஜோசப், 21 என, இரு மகன்கள் உள்ளனர். மனைவி இறந்த நிலையில், இரு மகன்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஷர்வின் அஜய் குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், ஸ்டீபன் எட்வர்ட்டை, அவரது மகன் ஷர்வின் அஜய் குமார் தாக்கியுள்ளார். காயமடைந்த ஸ்டீபன் எட்வர்ட், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கோடம்பாக்கம் போலீசார், ஷர்வின் அஜய் குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்