உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகள்களுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

மகள்களுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சென்னை,சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியர் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. மகள்கள் இருவரையும், 2020 முதல் 2021 வரை, சிறுமியரின் தந்தை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரிவிக்கக்கூடாது என, மனைவி மற்றும் மகள்களை மிரட்டியுள்ளார்.இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியரின் 40 வயது தந்தையை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:இளம் பருவத்தில், தன் தந்தையால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ந்து சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுமியரின் தந்தைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 55,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.தமிழக அரசு, பாதிக்கப்பட்ட சிறுமியருக்கு இழப்பீடாக, தலா 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ