உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆடு வெட்டும் நபருக்கு கத்திக்குத்து

ஆடு வெட்டும் நபருக்கு கத்திக்குத்து

புளியந்தோப்பு,:வியாசர்பாடியைச் சேர்ந்தவர் லோகநாதன், 49. இவர் புளியந்தோப்பு ஆடு தொட்டியில் ஆடு அறுக்கும் வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று அதிகாலை வழக்கம்போல் ஆடு அறுக்கும் வேலைக்குச் சென்றுள்ளார். வ.உ.சி நகர் அருகே செல்லும் போது, லோகநாதனை மடக்கிய மூவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது தன்னிடமிருந்த 60 ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய அந்த மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, லோகநாதனின் வயிற்றில் குத்திவிட்டு தப்பினர். ஸ்டான்லி மருத்துவமனையில் லோகநாதன் சேர்க்கப்பட்டார். லோகநாதனின் மகன் சூர்யபிரகாஷ், 23 அளித்த புகாரின்படி, மூவரை புளியந்தோப்பு போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி