உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 6 வயது சிறுமிக்கு தொல்லை: தாயின் 2வது கணவர் கைது

6 வயது சிறுமிக்கு தொல்லை: தாயின் 2வது கணவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர், நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு, கடந்த 9ம் தேதி உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சிறுமியின் பாட்டி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றார்.சிறுமியிடம் டாக்டர் விசாரித்தபோது, தாயின் 2வது கணவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இது குறித்து, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் விசாரணையில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து, குழந்தைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில், தாயின் இரண்டாவது கணவரை, போலீசார் கைது செய்தனர். பின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை