உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு புகுந்து கைவரிசை

வீடு புகுந்து கைவரிசை

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, டி.வி.கே., நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 38. இவர், ஐ.சி.எப்.,பில் துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். ஒரு மாதத்திற்கு முன், இவர்களது வீட்டு பீரோவில் இருந்த 2 சவரன் தங்கம் மற்றும் 150 கிராம் சில்வர் பொருட்கள் மாயமாயின. இது குறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர்.இதில், வழக்கமாக பீரோ மேலே வைக்கப்படும் சாவியால் திறந்து, பொருட்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது. பள்ளிக்கு செல்லும் சாந்தியின் பிள்ளைகள் சீக்கிரமே வீட்டிற்கு வருவதால், வேலைக்கு செல்லும் சாந்தி மற்றும் அவரது கணவர், வீட்டின் சாவியை எதிர்வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் கொடுத்து செல்வது வழக்கம். எனவே, அவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை