உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க.,வை நம்பினால் மதிப்பு பா.ஜ.,வை நம்பினால் இழப்பு : காசிமுத்து மாணிக்கம் பேச்சு

தி.மு.க.,வை நம்பினால் மதிப்பு பா.ஜ.,வை நம்பினால் இழப்பு : காசிமுத்து மாணிக்கம் பேச்சு

சென்னை, சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி கூட்டம், கொளத்துாரில் சமீபத்தில் நடந்தது. மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில், வர்த்தகர் அணி செயலர் காசிமுத்துமாணிக்கம் பேசியதாவது:ஓட்டு கூடியது, குறைந்தது என்பதெல்லாம் கதைக்கு உதவாது; வெற்றிதான் முக்கியம். கடந்த 2014ல் மூன்று அணி தனியாக தேர்தலை சந்தித்தது. பா.ஜ., அணி இரண்டு இடங்களை வென்றது. இன்று அண்ணாமலை, மோடி வந்த பின், ஒரு இடம் கூட பெறவில்லை. அதற்கு பொறுப்பேற்று, அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும் என, கனிமொழி கூறினார். அதற்கு அண்ணாமலை வியாக்கியானம் பேசுகிறார். தி.மு.க.,வை நம்பி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநில அந்தஸ்து பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒன்பது சீட்டிலிருந்து 10 ஆக உயர்ந்துள்ளது. ம.தி.மு.க., பார்லிமென்டில் தன் பெயரை பதிவு செய்துள்ளது. மக்கள் நீதி மையம் ராஜ்யசபாவில் கால் பதிக்க உள்ளது. ஆனால், பா.ஜ.,வை நம்பி வந்த பா.ம.க., மாநில அங்கீகாரத்தை இழந்துள்ளது. பாரிவேந்தர் வாரி இறைத்தும் டிபாசிட் இழந்துள்ளார்.தேர்தலில் அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்திருந்தாலும், தி.மு.க., கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Tetra
ஜூன் 14, 2024 18:55

பணம் கொடுத்து சத்தியம் வாங்கி வாக்கு பெறுவதும், கள்ள வாக்கு போட்டு வெற்றி பெறுவதும் தமிழனின் வெற்றியல்ல. களவாணித்தனம்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ