உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகரில் குழாய் உடைந்து சாலையில் தேங்கும் மழைநீர்

தி.நகரில் குழாய் உடைந்து சாலையில் தேங்கும் மழைநீர்

சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், தி.நகரில், பர்கிட் சாலை உள்ளது. தி.நகரில் மேம்பால பணிகள் நடப்பதால், இச்சாலை வழியாக, வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.இச்சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால் செல்கிறது. இச்சாலையின் இடதுபுறம் உள்ள மழைநீர் வடிகாலில் சேகரமாகும் மழைநீர், சாலையின் குறுக்கே உள்ள குழாய் வாயிலாக, வலதுபுறம் உள்ள மழைநீர் வடிகாலுக்கு செல்கிறது. அங்கிருந்து, தெற்கு உஸ்மான் சாலை வழியாக மாம்பலம் கால்வாய்க்கு செல்கிறது. மழை மற்றும் அதிக வாகன போக்குவரத்தால், சாலையின் குறுக்கே உள்ள குழாய் சேதமடைந்து, மழைநீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக, இச்சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை