உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இ.என்.டி., பிரிவு காவேரியில் துவக்கம்

இ.என்.டி., பிரிவு காவேரியில் துவக்கம்

சென்னை, சென்னை, ரேடியல் சாலையில் காவேரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், மேம்பட்ட வசதிகளுடன் கூடிய காது, மூக்கு தொண்டை பிரிவை, மெட்ராஸ் இ.என்.டி., ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் திறந்து வைத்தார்.இதுகுறித்து, காவேரி மருத்துவமனைகளின் நிறுவனர், செயல் தலைவர் எஸ்.சந்திரகுமார் கூறியதாவது:சிறந்த நிபுணர்களை உள்ளடக்கி காது, மூக்கு, தொண்டை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள் வாயிலாக உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்.திறமையான மருத்துவ நிபுணர்கள், மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதியுடன் செவிப்புலன் மீட்புக்கான கோக்லியர் உள்வைப்புகள், துாக்கத்தில் மூச்சுத்திணறலுக்கான சிகிச்சை, மூச்சுக்குழாய் அடைப்புக்கு அறுவை சிகிச்சை, நுண் காது அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மருத்துவமனையின் இணை மற்றும் செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ், பிரிவின் தலைவர் ஆனந்த் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை