உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்ஸ்.,சிடம் தகராறு போதை ஆசாமிகள் மீது வழக்கு

இன்ஸ்.,சிடம் தகராறு போதை ஆசாமிகள் மீது வழக்கு

திருவல்லிக்கேணி:வாலாஜா சாலையில் மதுபோதையில், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட மூவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருவல்லிக்கேணி சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் அறிவழகன், நேற்று முன்தினம் இரவு, வாலாஜா சாலை 'டாஸ்மாக்' கடை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை நிறுத்தி விசாரித்தார்.விசாரணையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரில் ஒருவரது அண்ணன், மதுபோதையில் ஆய்வாளரிடம் வாய் தகராறில் ஈடுபட்டார்.பின், மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், 30, நொச்சிகுப்பம் சகோதரர்களான மணிகண்டன், 27, முருகேஷ், 29, என்பது தெரிந்தது.தொடர்ந்து, மூவர் மீதும் போக்குவரத்து போலீசார், மதுபோதையில் வாகனம் இயக்கியதற்காக வழக்கு பதிவு செய்து, காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை