உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பீருடன் பினாயில் அருந்தியவரிடம் விசாரணை

பீருடன் பினாயில் அருந்தியவரிடம் விசாரணை

அயனாவரம், அயனாவரம், பில்கிங்டன் சாலையை சேர்ந்தவர், கோபிநாத், 49. ஐ.டி., ஊழியர். இவருக்கு, மீனாட்சி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.வீட்டில் குடும்ப பிரச்னை காரணமாக, கோபிநாத் சில நாட்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்ற கோபிநாத், இரவு வரை வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த மனைவி, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கோபிநாத் வாயில் நுரை தள்ளியபடி சுயநினைவின்றி கிடந்துள்ளார். அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக, பீருடன், கழிவறைக்கு பயன்படுத்தும் பினாயிலை கலந்து குடித்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ