உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் கடை சூறை வி.சி., பிரமுகர் மீது வழக்கு

போதையில் கடை சூறை வி.சி., பிரமுகர் மீது வழக்கு

எம்.கே.பி.நகர், கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ராஜமுருக பூபதி, 47. இவர், எம்.கே.பி.நகர், 11வது மத்திய குறுக்கு தெருவில், அபிநயா பவர் டூல்ஸ் எனும் கடையை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, இவரது கடைக்கு மதுபோதையில் வந்த மர்ம நபர், கடையில் இருந்த மின்மோட்டாரை உடைத்து விட்டு, ராஜமுருக பூபதியை மிரட்டி விட்டுச் சென்றுள்ளார்.எம்.கே.பி.நகர் போலீசாரின் விசாரணையில், எம்.கே.பி.நகரைச் சேர்ந்த மணிகண்டன், 32, என்பதும், வி.சி., வட்ட செயலர் என்பதும் தெரிந்தது.இவர் மீது, 12 குற்ற வழக்குகள் உள்ளன. போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ