உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜகஜ்ஜால வழிப்பறி திருடர்கள் சோழிங்கநல்லுாரில் கைது

ஜகஜ்ஜால வழிப்பறி திருடர்கள் சோழிங்கநல்லுாரில் கைது

செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுாரில் சில மாதங்களாக, மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்தது.குற்றவாளிகள் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். செம்மஞ்சேரி போலீசார், தனிப்படை அமைத்து தேடினர்.வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது, சோழிங்கநல்லுார், ஓடைகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜனா, 24, வினித், 23, என தெரிந்தது. நேற்று முன்தினம், இவர்களை கைது செய்த போலீசார், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 7 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், 'பாதசாரிகளை குறிவைத்து, பைக்கில் சென்று மொபைல் போன்களை பறித்து வந்தனர். இருவர் மீதும், ஏற்கனவே தலா 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எங்களை யாராலும் பிடிக்க முடியாது பேசிவந்தனர். தற்போது பிடிபட்டுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை