உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில் ஜமாபந்தி

தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில் ஜமாபந்தி

தாம்பரம், தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில், வருவாய் தீர்வாயம் எனப்படும், ஜமாபந்தி இன்று துவங்குகிறது. அந்தந்த பகுதிகளை சேர்ந்தோர் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் மூன்று நாட்களும், பல்லாவரத்தில் இரண்டு நாட்களும் முகாம் நடக்கிறது.தாம்பரம் தாலுகா, புலிகொரடு, கடப்பேரி, தாம்பரம், பெருங்களத்துார், முடிச்சூர், பீர்க்கன்காரணை, இரும்புலியூர், திருவஞ்சேரி பகுதிக்கு, ஜூன் 12ல் ஜமாபந்தி நடக்கிறது. ஜூன், 13ல் சேலையூர், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், கவுரிவாக்கம், மாடம்பாக்கம், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம், மூலச்சேரியில் முகாம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, ஜூன் 14ல் நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன் கழனி, சித்தாலப்பாக்கம், வேங்கைவாசலில் ஜமாபந்தி நடக்கிறது. பல்லாவரம் தாலுகா, ஜமீன் பல்லாவரம் பகுதி - 1 மற்றும் 2, ஈசா பல்லாவரம், கீழ்க்கட்டளை, அஸ்தினாபுரத்தில், ஜூன் 12ம் தேதியும், அனகாபுத்துார், பொழிச்சலுாரில், ஜூன் 13ம் தேதியும் ஜமாபந்தி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை