| ADDED : மே 15, 2024 12:32 AM
சென்னை,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும், வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில், இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகளில், பல்வேறு பாடத்திட்டங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எட்டு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பயிற்சியில் நேரடியாக சேரலாம். விண்ணப்பிக்க விரும்புவேர், ஜூன் 7ம் தேதிக்குள், www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் அல்லது வட சென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 94990 55653, 81446 22567 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.