உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வதேச சிலம்ப போட்டி பதக்கங்கள் அள்ளிய காஞ்சி

சர்வதேச சிலம்ப போட்டி பதக்கங்கள் அள்ளிய காஞ்சி

காஞ்சிபுரம், தாய்லாந்து சிலம்பம் கமிட்டி மற்றும் சர்வதேச சிலம்பம் கமிட்டி சார்பில், சர்வதேச அளவிலான நான்காவது சிலம்பம் சாம்பியன்ஷிப், தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்கில். ஆக., 3 முதல் 5 வரை நடந்தது.இதில், 8 - 35 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்போட்டியில், காஞ்சி ஸ்போர்ட்ஸ் அகாடமியில், சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவி உட்பட 6 மாணவர்கள் பங்கேற்றனர். ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில், 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என, 12 பதக்கங்களை வென்று அசத்தினர். பதக்கம் வென்ற வீரர்களை பயிற்சியாளர் பாபு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி