உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீஸ் சார்பில் கராத்தே பயிற்சி

போலீஸ் சார்பில் கராத்தே பயிற்சி

சென்னை, பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 23,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள, மாணவ, மாணவியருக்கு இலவசமாக கராத்தே கற்று கொடுக்க, பெரும்பாக்கம் காவல் நிலையம் முன்வந்துள்ளது. கராத்தேயில் தேசிய அளவில் பட்டம் பெற்றுள்ள தலைமைகாவலர் காமராஜ் பயிற்சி வழங்க உள்ளார்.தற்காப்பு கலையாகவும், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்குள் வகையிலும், வாரந்தோறும் சனி, ஞாயிற்று கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவ, மாணவியர் 94990 03079 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை