உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடமாநில வாலிபர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி

வடமாநில வாலிபர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி

தேனாம்பேட்டைவடமாநில வாலிபர்கள் இருவரிடம், கத்திமுனையில் வழிப்பறி செய்த மூவரை, போலீசார் தேடி வருகின்றனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் போக்தி,40, தொப்பன்,30.இவர்கள் இருவரும் சென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து, அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, இருவரும் ஆழ்வார்பேட்டை, சேஷாத்திரி சாலை வழியாக சென்றனர். அப்போது, மூன்று, 'பைக்'குகளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், கத்தி முனையில் மிரட்டி, இவர்கள் இருவரிடமும் இருந்த 6,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்படி, தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ