உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கே.வி.எஸ்., மண்டல தடகள போட்டி திருச்சி, சூலுார் பள்ளிகள் அபாரம்

கே.வி.எஸ்., மண்டல தடகள போட்டி திருச்சி, சூலுார் பள்ளிகள் அபாரம்

சென்னை, சென்னை கேந்திரிய வித்யாலயா - ஐ.ஐ.டி., சென்னை இணைந்து, 53வது கே.வி.எஸ்., மண்டல தடகள போட்டியை, சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் 3 நாட்கள் நடத்தின.இப்போட்டியில், சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 380க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.நிறைவு விழாவில், சென்னை ஐ.ஐ.டி., சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் செந்தில்குமார், வி.எம்.சி., - கே.வி., டீன் பிரதாப் ஹரிதாஸ் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அனைத்து போட்டிகள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில், திருச்சி கேந்திரிய வித்யாலயா பள்ளி முதலிடத்தை பிடித்தது. இரண்டாம் இடத்தை, சூலுார் ஏ.எப்.எஸ்., பள்ளி கைப்பற்றியது.முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்த மாணவர்கள், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்