உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபர் கொலை வழக்கு ரவுடிகள் இருவருக்கு ஆயுள்

வாலிபர் கொலை வழக்கு ரவுடிகள் இருவருக்கு ஆயுள்

பாடி புதுநகர், பாடி புதுநகர் 13வது தெருவைச் சேர்ந்தவர் அழகுமுருகன், 27. இவர், கடந்த 2019ம் ஆண்டு, அக்., 28ம் தேதி, நண்பர் புருேஷாத்தமனுடன், பாடி புதுநகர் 11வது சந்திப்பு அருகே டூ - வீலரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, மர்ம நபர் கும்பல் அழகுமுருகனின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, கத்தியால் வெட்டி அவரை கொலை செய்தனர். தடுக்க முயன்ற புருேஷாத்தமனுக்கும் வெட்டு விழுந்தது. இது குறித்து, ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரித்தனர்.இது தொடர்பாக, பாடி புதுநகரைச் சேர்ந்த மோகன், 26, பாடிகுப்பத்தைச் சேர்ந்த டேனியல், 23, உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதில், மூன்று பேர் சிறுவர்கள். அவர்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.கொலை வழக்கு விசாரணை, பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் - 3ல் நடந்து வந்த நிலையில், குற்றவாளிகள் மோகன், டேனியல் ஆகியோருக்கு, ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று சிறுவர்களில், ஒருவர் 2023, அக்., 12ம் தேதி இறந்துவிட்டார். மற்ற இரு சிறுவர்களுக்கு திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ