உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மோதி வடமாநில வாலிபர் பலி

லாரி மோதி வடமாநில வாலிபர் பலி

மணலி:மணலி, தீயம்பாக்கம், கொசப்பூர் சாலையில், 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர், சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே வந்த கான்கிரீட் கலவை கலக்கும் லாரி, அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், நிலைதடுமாறி விழுந்தவர், லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தலைமறைவானார். இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை