உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமை செயலகத்தில் வேலை ரூ.13.27 லட்சம் ஏமாற்றியவர் கைது

தலைமை செயலகத்தில் வேலை ரூ.13.27 லட்சம் ஏமாற்றியவர் கைது

ஆவடி,சென்னை தலைமை செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 13.27 லட்சம் ரூபாய் ஏமாற்றிய செங்குன்றம் நபரை, போலீசார் கைது செய்தனர்.சோழவரம், ஆத்துார், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் தசரதன், 55. இவர், கடந்த 31ம் தேதி, ஆவடி மத்திய குற்றப் பிரிவில் ஒரு புகார் அளித்தார்.புகாரில் அவர் கூறியதாவது:செங்குன்றம், வடகரை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2018ல், ராஜ்பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.அவர், சென்னை தலைமை செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும், பணி நியமன ஆணை நகலையும் காட்டினார்.இதனால், எனக்கு தெரிந்தவர்கள் சிலரிடம் தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 10 நபர்களிடம், 25 லட்சம் ரூபாய் வசூலித்து, ராஜ்பாபுவிடம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றினார். பின், ராஜ்பாபுவிடம் இருந்து, 11.73 லட்சம் ரூபாயை போராடி திரும்ப பெற்றேன்.மீதமுள்ள 13.27 லட்சம் ரூபாயை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். பணத்தை பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியிருந்தார்.இது குறித்து விசாரித்த மத்திய குற்றப் பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த செங்குன்றம், நாரவாரிக்குப்பத்தைச் சேர்ந்த ராஜ்பாபு, 52, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை