உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மும்பை போலீஸ் என மிரட்டி ரூ.1.42 லட்சம் பறித்த நபர் கைது

மும்பை போலீஸ் என மிரட்டி ரூ.1.42 லட்சம் பறித்த நபர் கைது

வடபழனி, வடபழனி, குமரன் காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 52. கடந்த 24ம் தேதி, இவரது மொபைல் போன் எண்ணில், மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார்.மும்பையைச் சேர்ந்த 'பெடெக்ஸ்' எனும் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய அந்நபர், 'மும்பையில் இருந்து தைவானுக்கு நீங்கள் அனுப்பிய பார்சலில், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, போதைப் பொருட்கள் உள்ளன. மும்பை போலீசார் உங்களிடம் பேச விரும்புகின்றனர்' என கூறியுள்ளார்.பின், மற்றொரு நபர், 'நான் மும்பை போலீசின் அதிகாரி. போதைப் பொருட்கள் பார்சல் அனுப்பிய உங்களை கைது செய்ய உள்ளோம்' என பேசி மிரட்டியுள்ளார்.மேலும், 'நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பினால், ரிசர்வ் வங்கிக்கு அதை தெரியப்படுத்தி, மேற்கொண்டு விசாரிப்போம்' என கூறியுள்ளார்.இதையடுத்து ஸ்ரீராம், 1.42 லட்சம் ரூபாயை, மர்ம நபர் தெரிவித்த எண்ணிற்கு அனுப்பியுள்ளார். பின், வங்கிக்கு நேராக சென்று இதுகுறித்து தெரிவித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வடபழனி போலீசில் புகார் அளித்தார். அவர்கள், 'சைபர் கிரைம்' பிரிவு உதவியுடன் விசாரித்தனர். இதில், பெரியமேடு ஸ்டின்சர் தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார், 31, என்பவர், ஸ்ரீராமை மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது.இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட பெண் குற்றவாளியையும் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை