உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்திமுனையில் நகை, போன் பறித்த நபர் கைது

கத்திமுனையில் நகை, போன் பறித்த நபர் கைது

வளசரவாக்கம்,தேனாம்பேட்டை நல்லான் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42. இவர், போரூரில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 15ம் தேதி மாலை பணி முடிந்து, வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் நடந்து சென்றார்.அப்போது, அங்கு வந்த மர்ம நபர் செந்தில் குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2 கிராம் மோதிரம் மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர்.இதுகுறித்து விசாரித்த வளசரவாக்கம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்த அபினாஷ், 19, என்பவரை, நேற்று கைது செய்தனர்.இவரிடம் இருந்து, மோதிரம், மொபைல் போன் மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அபினாஷ் மீது ஐந்து திருட்டு வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை