உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹஜ் பயணியருக்கு மருத்துவ பரிசோதனை

ஹஜ் பயணியருக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை;தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணியருக்கு, இன்று முதல், மாவட்டந்தோறும் மருத்துவப் பரிசோதனை, தடுப்பூசி முகாம் நடத்தும்படி, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டில், இந்தியாவிலிருந்து 1,75,025 பேர் ஹஜ் புனித பயணம் செல்ல அனுமதி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து, 5,803 பேர் பயணம் மேற்கொள்கின்றனர்.அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளை, இன்று முதல், மாவட்ட நிர்வாகங்கள் அந்தந்த மாவட்ட ஹஜ் நிர்வாகத்துடன் இணைந்து நடத்த வேண்டும்.மருத்துவப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்கப்பட்ட ஹஜ் பயணியர் விபரங்களை, சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள், பொது சுகாதாரத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி