உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சினிமா பாடகர் தாக்கியதாக மெட்ரோ ரயில் அதிகாரி புகார்

சினிமா பாடகர் தாக்கியதாக மெட்ரோ ரயில் அதிகாரி புகார்

விருகம்பாக்கம்:மதுரவாயல், கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் வேல்முருகன், 45. இவர், கிராமிய பாடல்களில் பிரபலம். ஆடுகளம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, ஆற்காடு சாலை வழியாக காரில் வேல்முருகன் சென்றார்.விருகம்பாக்கம், வேம்புலி அம்மன் கோவில் அருகில் மெட்ரோ ரயில் பணிக்காக, இரவு நேரத்தில் ஒரு வழிப்பாதையாக மாற்றி இருந்தனர்.இதனால் வேல்முருகன், வீட்டிற்கு சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கு பணியில் இருந்த மெட்ரோ ரயில் கட்டுமான உதவி மேலாளர் வடிவேலு, 35, என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக வடிவேலு, விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதில் வேல்முருகன் மதுபோதையில் தன்னை தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன், சென்னை விமான நிலையத்தில் மதுபோதையில் அதிகாரிகளுடன் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ, தற்போது பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை