உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாரதமாதா சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு அவதி

பாரதமாதா சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு அவதி

சிட்லப்பாக்கம், தாம்பரம் சானடோரியத்தில், ஜி.எஸ்.டி., சாலை - சிட்லப்பாக்கத்தை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.இப்பாலத்தின் கீழ், சானடோரியம் ரயில் நிலையத்தை ஒட்டி, பாரதமாதா - சிட்லப்பாக்கம் சாலை சந்திப்பு உள்ளது. இப்பகுதியை தினசரி, ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.குறிப்பாக, கிழக்கு தாம்பரத்தில் இருந்து சிட்லப்பாக்கத்திற்கும், சிட்லப்பாக்கத்தில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கும் இதன் வழியாக ஏகப்பட்ட வாகனங்கள் செல்கின்றன.அதிக போக்குவரத்து உடைய இச்சந்திப்பில், வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை திருப்புவதால், விபத்து ஏற்படுகிறது. அதனால், சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணி அமர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை