உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழைய சிக்னல் கம்பத்தால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

பழைய சிக்னல் கம்பத்தால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், ஆவடி காமராஜர் சிலை அருகே ஆவடி 'செக் போஸ்ட்' உள்ளது. இதன் சுற்றுவட்டாரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி, வணிக நிறுவனங்கள், கோவில்கள், சர்ச் மற்றும் மசூதிகள் உள்ளன.பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும்.இங்குள்ள 'சிக்னல்' கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில், பழைய 'சிக்னல்' அப்புறப்படுத்தாமல் உள்ளது. அது புது சிக்னலை மறைத்தபடி உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். மேலும், போக்குவரத்து விதிமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பழைய சிக்னல் கம்பத்தை அகற்றுவதோடு, அதிநவீன கேமராக்கள் பொருத்தி விதிமீறலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவராமன், வாகன ஓட்டி, ஆவடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை