உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10.5 கிலோ கஞ்சா கடத்திய ம.பி., வாலிபர் கைது

10.5 கிலோ கஞ்சா கடத்திய ம.பி., வாலிபர் கைது

ஆலந்துார், கோடம்பாக்கம், விளையாட்டு மைதானம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.பரங்கிமலை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் தலைமையில் போலீசார், அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் மூட்டையுடன் சுற்றி வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரிடம், 10.5 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது.விசாரணையில் அவர், மத்திய பிரதேசம், ஊஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல், 30, என்பதும், வடமாநிலத்தில் இருந்து ரயில் வாயிலாக கஞ்சா கடத்தி வந்து சில்லரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்