உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே நேருவும், இந்திராவும் கருதவில்லை: நிர்மலா சீதாராமன்

கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே நேருவும், இந்திராவும் கருதவில்லை: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே நேருவும், இந்திராவும் கருதவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த விக்சித் பாரத் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: கோவையில் இருந்து பல்வேறு தொழில்துறை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அயல் நாடு செல்லும் இந்திய செவிலியர்களுக்கு நல்ல வரவேற்பும், வாய்ப்பும் கிடைத்துள்ளது. அயல்நாடு செல்லும் செவிலியர்களுக்கு அந்நாட்டு மொழிகளை மத்திய அரசு கற்றுக் கொடுக்கிறது. மக்களுடைய முயற்சிக்கு ஏற்ப, அரசும் செயல்பட்டால் அதிக பலன் கிடைக்கும். அது தான் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.,ஆட்சியில் நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்து ஆச்சரியப்படுகிறது. கோவிட் காலத்தில் இந்தியா சீக்கிரமாக மீண்டு வந்தது. 2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்தை பற்றியும், அந்த நிறுவனங்கள் இருக்கக்கூடிய இடத்தை பற்றியும் ஆராய்ந்த பின், முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தாரா?

பின்னர் பல்லாவரத்தில் நிருபர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பாஜ., பேசுவதாக கூற முடியாது. கச்சத்தீவு இந்தியாவின் இறையாண்மை தொடர்புடையது. திமுகவுக்கு தெரியாமல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக, 50 ஆண்டுகளாக பொய் பிரசாரம் நடந்து வந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கச்சத்தீவு வழங்கப்பட்ட போது, கூட்டணியில் இருந்த கட்சிகள், தற்போதும் கூட்டணியில் உள்ளது.

முகூர்த்தம் தேவையில்லை

கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே நேருவும், இந்திராவும் கருதவில்லை. ஒரு நாட்டின் ஒரு பகுதியை இழந்தது குறித்து பேச முகூர்த்தம் தேவையில்லை. கச்சத்தீவை பாறை என்று இந்திரா குறிப்பிட்டார். தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை கூறினால், போட்டியிடுவேன். கச்சத்தீவு குறித்து நீதிமன்றத்தி்ல இரு ரிட் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் திமுகவுக்கு வந்த 90 சதவீதம் பணம் ஒரு நபரிடம் இருந்து வந்துள்ளது. 1967க்குப் பிறகு காங்கிரஸ் என்னும் தேசிய கட்சியால் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை.

கண்ணீர் வருகிறது

தமிழகத்தில் மிக்ஜாம் புயல், வெள்ளப் பாதிப்பு வந்தவுடன், ரூ.950 கோடி தமிழக பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டது. சென்னைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி முன்கூட்டியே வழங்கப்பட்டது. ரூ. 5 ஆயிரம் கோடி எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு கூற வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்திருப்பதால் கண்ணீர் வருகிறது. ராமநாதபுரத்தில் போதைப்பொருட்கள் பிடிக்கப்பட்டதை குஜராத்தில் இருந்து வந்தது என்று கூற முடியுமா?. மீண்டும் மீண்டும் குஜராத்தை குற்றம் சாட்டுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஏப் 02, 2024 21:21

கச்சத்தீவை ஒரு பொருட்டாக தமிழக மக்களும் நினைக்கவில்லை!


kulandai kannan
ஏப் 02, 2024 20:59

மிக்சர் கருணாநிதி


Rajagopal
ஏப் 02, 2024 19:07

கச்சத்தீவு இந்தியாவுக்கு மீண்டும் வந்து விட்டால், இந்திய கடற்படை அங்கே மையம் ஏற்படுத்தி, போதைப்பொருள் கடத்தல், அகதிகள் கடத்தல், தமிழ் ஈழ தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், சீனாவின் வேவு பார்க்கும் மையங்கள், போன்றவற்றை முழுதும் ஒழித்துக்கட்ட முடியும் அந்தமான் தீவுகளில் சில மியான்மார் அருகில் வரை தொடர்ந்து இருக்கின்றன இவற்றை நமது தாத்தா நேரு அன்போடு, பர்மாவுக்கு கொடுத்து விட்டார் இன்று சீனர்கள் மியான்மாரின் ஒத்துழைப்போடு தங்களது கடற்படையின் மையங்களாக இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்


ramesh
ஏப் 02, 2024 17:56

தமிழ் நாட்டு மக்கள் வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னம் ஆகிய பொது வராத கண்ணீர் இபோது தேர்தல் வந்த உடன் நீலிகண்ணீராக வெளி வருகிறது


ramesh
ஏப் 02, 2024 17:54

நீங்கள் அருணாச்சல பிரதேசத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை அதனால் தான் சீனா காரன் நம் நாட்டில் உள்ள ஊர்களுக்கு அண்டை நாட்டுக்காரன் பெயர் வைக்கிறார்


Siddhanatha Boobathi
ஏப் 02, 2024 15:23

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு வங்கதேசத்துடன் எல்லை பிரச்சினைகளை சில பகுதிகளை விட்டுக் கொடுத்ததன் மூலம் தீர்த்துள்ளது ஒரு பெரிய நாடு நாட்டின் நலன் கருதி சில விஷயங்களை விட்டுக் கொடுத்தது ஏற்கனவே நடந்துள்ளது இப்பொழுதும் நடக்கிறது தேர்தலை ஒட்டி இதனை பெரிய பிரச்சினையாக மாற்றுபவர்கள் இருதரப்பிலும் இருக்கும் அரசியல்வாதிகள்அரசியல்வாதிகள் கச்சத்தீவை பொறுத்தவரையில் அது இந்தியாவுக்கு உரிமையானது ஆனால் நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் புனிதமானது சொல்லப்போனால் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை தாரைவாக்கப்படவில்லை அது இலங்கையின் ஒரு பகுதி என்று இந்தியா ஒத்துக் கொண்டு கையெழுத்து போட்டது ஆகவே அதனை இலங்கை தானாக முன்வந்து திருப்பித் தந்தாலே அன்றி அல்லது போர் செய்து கச்சத்தீவை மீட்டாலே அன்றி நாம் மீண்டும் கச்சத்தீவை பெற முடியாது அவை இரண்டுமே இந்தியாவுக்கு நடைமுறை பலன்களை அளிக்காத அணுகுமுறைகள்


Tamil nesan
ஏப் 02, 2024 15:21

லட்சத்தீவு , தெற்க்கே வந்தால் கச்சத்தீவு , வேற ஒண்ணுமில்ல மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் ,


தமிழ்
ஏப் 02, 2024 15:00

நீங்கள் மட்டும் என்னவாம். பத்து வருடங்களாக ஒன்றுமே செய்யாமல், இப்போது தேர்தல் வந்ததால் மட்டுமே கச்சத்தீவின்மேல் உங்களுக்கு அக்கறை இருப்பதுபோல நடிக்கிறீர்கள்.


Mohamed Malick
ஏப் 02, 2024 14:27

முதல நீங்க எலெக்ஷனல நின்னு , ஜெயிச்சுட்டு வாங்க மேடம்


sabari
ஏப் 02, 2024 13:58

அட கெள்வி அருணாச்சல பிரதேசம் என்னாச்சு? சீனா என சொன்னால் தொடை நடுங்குதே?


ஆரூர் ரங்
ஏப் 02, 2024 18:06

பாகிஸ்தான் நமது காஷ்மீரை ஆக்கிரமிக்க விட்டது யார்? 1971 போர் நடக்கும் போது கூட மீட்காத தவறு யாருடையது?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ