உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதிய கருத்தரிப்பு மையம் சவீதா மருத்துவமனையில் திறப்பு

புதிய கருத்தரிப்பு மையம் சவீதா மருத்துவமனையில் திறப்பு

சென்னை:சவீதா மருத்துவமனையில், புதிய கருத்தரிப்பு மையத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.சென்னை, சவீதா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இனப்பெருக்க உதவி நுட்பங்களுக்கான, 'ஸ்பிவுரட்' எனும் பெயரில், கர்ப்ப புத்துணர்வு மற்றும் கருப்பை சிகிச்சை மையத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.இம்மையம் குறித்து, சவீதா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் வேந்தர் என்.எம்.வீரய்யன் கூறியதாவது:பல்வேறு காரணங்களால், தம்பதிகளால் இயற்கையாக குழந்தைகள் பெற முடிவதில்லை. அவர்களுக்கு நவீன மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இனப்பெருக்க உதவி நுட்பங்களால் கருத்தரிப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். 'ஹை டிபெண்டன்சி யூனிட், ஐ.சி.யு., பேக் அப்' மற்றும் ரத்த ஏற்றும் வசதிகளுடன் கூடிய பிரசவ அறையுடன், இந்த மையம் அமைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வில், குறு, சிறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, கல்லுாரியின் இணை வேந்தர் தீபக் நல்லசாமி, டீன் குமுதா உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி