உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை திருவள்ளூரில் புதிய மனைகள் வாரியம் திட்டம்

சென்னை திருவள்ளூரில் புதிய மனைகள் வாரியம் திட்டம்

சென்னை, ஏற்கனவே உருவாக்கப்பட்ட திட்டங்களில் மனைகள் விற்காமல் இருக்கும் நிலையில், சென்னை, திருவள்ளூர், வேலுார் மாவட்டங்களில் புதிய மனைப்பிரிவுகளை உருவாக்க, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுஉள்ளனர். தற்போதைய நிலவரப்படி, பல்வேறு மாவட்டங்களில், 7,482 வாரிய மனைகள் விற்காமல் முடங்கியுள்ளன. இந்நிலையில், புதிய திட்டங்களை முடுக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையை ஒட்டிய பகுதிகளில் மனைகள் வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், வேலுார் மாவட்டங்களில், 779 மனைகள் அடங்கிய புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகளுக்காக, 20 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மனை விபரம்

சென்னை, அம்பத்துாரில் 152; சோழிங்கநல்லுாரில் 117 மனை பிரிவுகள் அமைகின்றன. திருவள்ளூர், ஆவடி யில் 45; வேலுார், குடியாத்தத்தில் 465 என மொத்தம் 779 மனை பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளன.

புதிய மனைப்பிரிவு விபரம்

மாவட்டம் / பகுதி / மனை எண்ணிக்கை சென்னை / அம்பத்துார் / 152சென்னை / சோழிங்கநல்லுார் / 117 திருவள்ளூர் / ஆவடி / 45 வேலுார் / குடியாத்தம் / 465மொத்தம் / 779


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !