உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூவம் கரையோர வீடுகள் கணக்கெடுக்க எதிர்ப்பு

கூவம் கரையோர வீடுகள் கணக்கெடுக்க எதிர்ப்பு

திருவேற்காடு, திருவேற்காடு, பெருமாள் கோவில் தெரு, கூவம் நதிக்கரையோரம், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால், மழைக்காலத்தில் வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. அதை அகற்றுவதற்கு, வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தலைமையில், பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ், வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கு அங்கு வந்தனர். பொதுமக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாட்சியர் கற்பகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வீடுகள் அகற்றுவதற்கான உத்தரவு நகலை பொதுமக்கள் கேட்டனர்.'ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்' என அதிகாரிகள் கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கடும் வாக்குவாதம் செய்தனர்.இதையடுத்து, அளவீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு ஊழியர்கள் 'பெயின்ட்'டில் குறியீடு வரைந்துவிட்டுச் சென்றனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ