உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவியிடம் டபுள் மீனிங் முதியவர் கைது

மாணவியிடம் டபுள் மீனிங் முதியவர் கைது

வேளச்சேரி, வேளச்சேரி, உஷா தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் ஜெயக்குமார், 58. இவர், தினமும் நடைபயிற்சி செல்வார்.ஒரு வாரமாக, வேளச்சேரியைச் சேர்ந்த 20 வயதுள்ள, சட்டக்கல்லுாரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியும் இவரை, தந்தை போல நினைத்து பேசியுள்ளார்.நேற்று முன்தினம், மாணவியிடம் தவறான கண்ணோட்டத்தில் அணுகி, ஒரு கட்டத்தில், 'இரட்டை அர்த்த' வார்த்தைகளில் பேசி உள்ளார். கோபமடைந்த மாணவி, வேளச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, சார்லஸ்ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை