உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓ.எம்.ஆர்., வடிகாலில் கழிவுநீர் விடுவது அதிகரிப்பு 95 சதவீத கட்டடங்களின் உரிமையாளர்கள் அடாவடி

ஓ.எம்.ஆர்., வடிகாலில் கழிவுநீர் விடுவது அதிகரிப்பு 95 சதவீத கட்டடங்களின் உரிமையாளர்கள் அடாவடி

சென்னை, : சென்னையில் முக்கிய சாலையாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. இங்கு, ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்த சாலை, மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரம் உடையது.இதில், செம்மஞ்சேரி வரை, 17 கி.மீ., துாரத்தில், சென்னை மாநகராட்சி, அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் மண்டல எல்லையில் உள்ளது.இந்த சாலையில், 95 சதவீதம் வணிகம் சார்ந்த கடை, ஹோட்டல், நிறுவனங்கள் உள்ளன. இங்கு, கழிவுநீர் திட்டம் முழுமை பெறவில்லை.இதனால், பெரும்பாலான கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் உள்ள வடிகாலில் விடப்படுகிறது.அதுவும், பிளாஸ்டிக் குப்பை, உணவு கழிவுகள் கலந்து விடுவதால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது. இதனால், சுகாதார பிரச்னை, போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு என, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.கழிவுநீரை, தொட்டி கட்டி சேமித்து, லாரியில் வெளியேற்ற வேண்டும். ஆனால், 95 சதவீத நிறுவனங்கள் அதை செய்வதில்லை. வடிகால், கால்வாயில் விடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஓ.எம்.ஆரில், ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வேலை செய்வோர் அதிகரித்து வருகின்றனர்.ரியல் எஸ்டேட் தொழில் அபார வளர்ச்சியில் செல்கிறது. ஆனால், கழிவுநீர், வெள்ள பாதிப்பு போன்ற பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை.மழைநீர் செல்ல வேண்டிய வடிகால், கால்வாயில் கழிவுநீர் செல்கிறது. மழைநீரால் ஏற்படும் பாதிப்பைவிட கழிவுநீர் பாதிப்பு அதிகமாக உள்ளது.வணிக நிறுவனங்களில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு, கழிவுநீர் இணைப்பை வடிகாலில் விடும் அரசியல்வாதிகள் இன்னும் உள்ளனர். இதை, அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.இப்படியே சென்றால், ஓ.எம்.ஆரில் சுகாதார பிரச்னை அதிகரிக்கும். வடிகால், கால்வாய்களில் ஆய்வு நடத்தி, கழிவுநீர் விடும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Neelakanta Pillai
ஜூன் 17, 2024 22:14

கழிவு நீரை வெளியேற்ற அதற்கான கட்டமைப்பை சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை அதை பேச துப்பு கெட்டவர்கள் கருத்து சொல்ல வருகிறார்கள். அரசு தனது கடமையை செய்து கொடுத்த பின்பு பொதுமக்கள் அதை மீறுகிறார்களா என்று பார்க்காமல் அரசினுடைய பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு பொதுமக்களை குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. பொதுமக்களா சொன்னார்கள் சென்னையை சிங்கப்பூர் ஆக மாற்றுவேன் என்று, வேஷதாரிகள்


Raa
ஜூன் 17, 2024 13:02

சிறப்பு.... ஆகவே உங்களுக்கு யார் திருடன் என்று தெரியும்... நடவடிக்கைதான் எடுக்க மாட்டீர்கள்? அவ்வளவுதானே உங்கள் நிர்வாகம்?? "வணிக நிறுவனங்களில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு, கழிவுநீர் இணைப்பை வடிகாலில் விடும் அரசியல்வாதிகள் இன்னும் உள்ளனர். இதை, அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை."


மேலும் செய்திகள்