உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சரிந்த நிலையில் மின்பெட்டி நடைபாதையில் பாதசாரிகள் பீதி

சரிந்த நிலையில் மின்பெட்டி நடைபாதையில் பாதசாரிகள் பீதி

கோடம்பாக்கம் மண்டலம் கே.கே.நகரில், வன்னியர் தெரு அமைந்துள்ளது. இது, கே.கே.நகர் மற்றும் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது.இச்சாலையில், நடைபாதையில் மின் இணைப்பு பெட்டி சரிந்து விழுந்துள்ளது. இதனால், பாதசாரிகள் அச்சத்தில் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், நடைபாதையில் பொதுமக்கள் கவனிக்காமல் சென்றால், மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து புகார் அளித்தும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, உயிர்பலி ஏற்படும் முன், மின் இணைப்பு பெட்டியை சீர் செய்ய வேண்டும்.- வி.கமலதாஸ், கே.கே.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை