உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு தொற்று நோய் அச்சத்தில் மக்கள்

குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு தொற்று நோய் அச்சத்தில் மக்கள்

செம்மஞ்சேரி, ஜூன் 7-ஓ.எம்.ஆர்., பகுதி சோழிங்கநல்லுார் மண்டலத்தில் 196, 198, 199, 200 ஆகிய வார்டுகள் மற்றும் இதை ஒட்டி உள்ள பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள 25,000 வீடுகளுக்கு, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. சில நாட்களாக, இந்த பகுதிகளுக்கு, வீராணம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இதனால், நான்கு நாட்களாக குடிநீர் கலங்கலாகவும், துர்நாற்றத்துடனும் வினியோகிக்கப்படுகிறது. இந்த நீரை ஆய்வுக்கு அனுப்பி, தரம் ஆய்வு செய்யப்படுகிறது.இந்நிலையில், 200வது வார்டில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டும்போது, பிரதான குடிநீர் குழாய் உடைக்கப்பட்டது.அருகில் செல்லும் கழிவுநீரை குழாயையும் உடைந்ததால், குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது. பள்ளம் தோண்டிய நிறுவனம், சேதமடைந்த குழாயை சீரமைக்காமல், மண் கொட்டி மூடியது. இதனால், கழிவுநீர் கலந்த குடிநீர், அதிக நேரம் வீடுகளுக்கு சென்றது.மண் கொட்டியதை மீறி, குடிநீர் வெளியேறி ஆறாக பாய்ந்தபின், அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. அதன்பின், சீரமைக்கும் பணி துவங்கியது. தொடர்ந்து, குடிநீர் கலங்கலாகவும், கழிவுநீர் கலந்தும் பயன்படுத்தியதால், தொற்று நோய் பரவும் அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. குழாயை சீரமைத்தபின், கீழ்நிலை மற்றும் மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீர் வினியோகிக்க வேண்டும் என, பொதுமக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை