உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெரம்பூர் வாலிபர் சாவில் மர்மம் 2வது மனைவியிடம் விசாரணை

பெரம்பூர் வாலிபர் சாவில் மர்மம் 2வது மனைவியிடம் விசாரணை

பெரம்பூர், பெரம்பூர், ரங்கசாயி தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 29. இவர், தி.நகரில் உள்ள பாத்திரக் கடையில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தார்.இவர், முதல் மனைவி ரோஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரை பிரிந்தார். பின், குடும்பத்தினர் ஒப்புதலுடன் பிரியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 8ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி, முதல் மனைவியை பார்க்க சென்றுள்ளார். மாலை வீடு திரும்பியபோது மதுபோதையில் இருந்துள்ளார்.ராஜேஷ் முதல் மனைவியை பார்த்து வந்தது, பிரியாவுக்கு தெரியவர, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டை விட்டு பிரியா வெளியே வந்து அமர்ந்துள்ளார்.இந்த நிலையில், மது போதையில் இருந்து ராஜேஷ் வீட்டிலேயே மின்விசிறியில் துப்பட்டா வால் துாக்கிட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.நள்ளிரவு வீட்டுக்குள் சென்ற பிரியா, கணவர் துாக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். துப்பட்டாவை அறுத்து, கணவர் உடலை இறக்கி, 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் ராஜேஷ் இறந்தது தெரிய வந்தது. பிரியாவின் சத்தத்தை கேட்டு, வீட்டின் உரிமையாளர் மதன்குமார் போலீசுக்கு தகவல் அளித்தார். உடலை கைப்பற்றிய செம்பியம் போலீசார் பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முரண் தகவல்

உணவு சாப்பிட்டு படுத்தவர் இறந்து விட்டதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் பிரியா கூறியுள்ளார். போலீசாரிடம், பக்கத்து விட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு சென்று, சாப்பிட்டு வந்தவர் படுத்ததும் பேச்சு மூச்சின்றி இறந்ததாக' முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை